Tuesday, April 15, 2008

நானும் என் தனிமையும்

நானும் என் தனிமையும் எப்பொழுதும் பேசிக் கொள்வது ஒரே விஷயமாகத் தான் இருக்கும். என் வாழ்வில் தனிமை நிறைய இடத்தைப் பெற்று இருக்கிறது. தனிமையின் தவிப்பு, நினைப்பு, சிரிப்பு,அழுகை என் நான் எவ்வளவோ அனுபவித்திருந்தாலும் தவிப்பும் , அழுகையும் மட்டுமே பெரும் பங்கு வகிக்கும். தனிமையில் இருக்க பெரும்பாலானோர் விரும்புவதில்லை என்றாலும் நான் நினைத்தால் கூட என் தனிமையை என்னால் தவிர்க்க முடியாத நிலையில் நான் இருக்கிறேன். படித்து முடித்த கையுடன் என்னை வந்து ஆக்கிரமித்த தனிமை திருமணம் ஆன பிறகு விலகி ஓடி விடும் என்றே நினைத்திருந்தேன். திருமணம் ஆனாலும் நான் உன்னை விட மாட்டேன் என்று என் வேலை மூலமாக தனிமை என்னைத் தழுவிக் கொண்டு இருந்தது. தனிமையில் நாம் நம் வாழ்க்கையில் நடந்த நிகழ்வுகளையும், நடக்கப் போகும் நிகழ்வுகளை கற்பனை செய்வதிலும் தன் பொழுதைக் கழிக்க வேண்டி வரும். ந்டந்தவைகளில் நல்ல விஷயங்கள் மிகவும் குறைவாகவே நிழற்படமாக ஓடும். கசப்பான விஷயங்கள் மீண்டும் மீண்டும் வந்து கடல் அலைகளாய் மனதில் மோதி விட்டுச் செல்லும்அப்படி மனச் சுவற்றில் மோதும் அலைள் பெளர்ணமி இரவு அலைகளைச் சேர்ந்த ரகமாய் இருந்தால் தவிப்பு உண்டாகும். ஆனால் அதே சமயம் அந்த அலைகள் சுனாமியாய் மாறி மோதும் போது அழுகை வெடித்துக் கிளம்பும். அதன் பிறகு நாம் நமது எதிர்காலத்தில் நிகழப்போவதாக கற்பனை காண எங்கே மனம் லயிக்கும். மீண்டும் மீண்டும் தனிமையில் தவிப்பையும், அழுகையையும் பெளர்ணமி இரவு அலைகளும், சுனாமி அலைகளும் தந்து கொண்டே இருக்கும். அந்த நேரம் நாம் சாய்ந்து கொள்ள ஒரு தோள் அல்லது தலை வைத்துப் படுக்க ஒரு மடி கிடைக்காதா என்று ஏங்கும் அனுபவம் இருக்கிறதே, அப்பப்பா. நானும் என் தனிமையும் எப்பொழுதும் பேசிக் கொள்வது இந்த ஒரே விஷயமாகத் தான் இருக்கும்.

2 comments:

Divya said...

\\கசப்பான விஷயங்கள் மீண்டும் மீண்டும் வந்து கடல் அலைகளாய் மனதில் மோதி விட்டுச் செல்லும்\\

மறுக்கமுடியாத உண்மை....கசப்பான விஷயங்களை அவ்வளவு எளிதில் நாம் மறந்துவிடுவதில்லை!!

பதிவு நல்லாயிருக்கு!!

\மனச் சுவற்றில் மோதும் அலைள் \

அலைகள்....திருத்தம் செய்துக்கொள்ளுங்கள்!!

Nimal said...

உங்களின் கிறுக்கல்களுக்கும் வித்தியாசமான நடை இருக்கிறது.

தனிமை சிலருக்கே இனிமை, பலருக்கு வெறுமைதான்...!
நன்றாக இருக்கிறது...!