Wednesday, April 23, 2008

பேராசை

கடலுக்குள் வீடு கட்டி என் கனவுக் கன்னியுடன் வாழ ஆசை.

கரித்துண்டால் வானத்தில் என் பெயரெழுதிப் பார்க்க ஆசை.

தினமும் நான் குளிக்க மழைச் சாரலே ஷவராய் பெய்ய ஆசை.

சுட்டெரிக்கும் வெயிலில் குடையாய் தலைக்கு மேலே
ஒரு மேகம் கூடவே வர ஆசை.

கண்ணால் காண்பதுவும் காதால் கேட்பதுவும் கூட என்னுடையதாக ஆசை.

நின்றாலும் நடந்தாலும் என்னைத் துதிப்பவர்கள்
கூட்டம் கூடவே இருக்க ஆசை.

என்றென்றும் முதுமையடையாமல் மார்க்கண்டேயனாய்
இளமையாகவே இருக்க ஆசை.

என் கண் அசைவில் இரவு பகலாகவும் , பகல் இரவாகவும் மாற ஆசை.

இவ்வுலகம் மட்டுமல்ல பரந்த வான்வெளியும் , கோள்களும்
என் ஆனைப்படி இயங்க ஆசை.

இவ்வளவும் நடந்து விட்டால் என்னைக் கடவுள்
என்று எல்லோரும் அழைக்க வேண்டுமென நினைப்பது
ஒன்றும் பேராசை இல்லையே.