Thursday, May 15, 2008

ஆட்டோ வாசகங்கள்



1. பிரசவத்திற்கு இலவசம்.
ஆஸ்பத்திரிக்கு சென்று குழந்தை பெற்றுக் கொள்ள பணம் கட்ட வேண்டுமென்பதால்
ஆட்டோவில் ஏற்றி குலுக்கி குலுக்கி வலியே இல்லாமல் , வழியிலேயே பிரசவத்தை இலவசமாக்குவதால் தான் அப்படி எழுதி இருக்கிறார்களோ?

2. உன் வாழ்க்கை உன் கையில்
ஆட்டோவிற்கு பின்னால் வரும் வண்டியின் ஓட்டுனர்களை , ஸ்டியரிங்கை ஜாக்கிரதையாக கையாண்டால் மட்டுமே " உன் வாழ்க்கை உன் கையில் " என்கிறார்கள் போலும்.


3. பெண்ணின் திருமண வயது - 21
காலம், நேரம், மாதங்கள், வருடங்கள் தெரியாமல் காதலித்துக் கொண்டே இருக்கும் பெண்களுக்கு , உங்களின் திருமண வயது வந்து விட்டது, ஓடிப் போய் தாலி கட்டிக் கொள்ளுங்கள் என்று சூசகமாக சொல்கிறார்களோ?

4. வீட்டுக்கு ஒரு மரம் வளர்ப்போம்
பெற்ற பிள்ளைகளை வளர்க்கத் தெரியாமல் வளர்த்து வீட்டிற்கும், நாட்டிற்கும் பாரமாய் எதற்கும் உதவாத உதவாக் கரையாய் திரிய விட்டிருக்கும் பெற்றோர்கள் வீட்டிற்கு ஒரு மரம் வளர்த்தாலாவது நாட்டிற்கு நல்லது என்பதால் தானோ?