Sunday, April 20, 2008

தொடரும் சிறுகதைகள்

பள்ளியில் படிக்கும் படிப்பு இன்றைய நடைமுறை வாழ்க்கைக்கு எள்ளளவும் ஒவ்வாது என்றாலும் தொடர்ந்து படிக்க வேண்டியிருப்பது.

மிகச் சாதாரண வேலையில் இருந்து கொண்டு வீடும் , காரும் வாங்கும் கனவை நனவாக்க கடன் வாங்கி மற்றவர்களைப் போலவே அல்லல்படுவது.

திருமணம் செய்து குடும்பஸ்தனாக மாறினால் மலைப்பாதையில் வரும் கொண்டை ஊசி பெண்டுகள் போல கஷ்டங்கள் வரும் என்று தெரிந்தும் திருமணம் செய்து கொள்வது.

அளவிற்கு அதிகமாக பிள்ளைகள் பெற்றால் ஆண்டியாக நேரிடலாம் என்று தெரிந்தும் ஆசையை அடக்க முடியாமல் போவது.

குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்க நினைத்தால் அந்தப் பாதை நம்மை வெகு தொலைவு வரை கொண்டு செல்லாது என்று தெரிந்தும் அந்தப் பாதையில் நடப்பது.

இவ்வுலகை விட்டு நீங்கும் பொழுது எதையும் எடுத்துச் செல்ல இயலாது என்று தெரிந்தும் எல்லாவற்றையும் அடைய ஆசைப்படுவது.

இப்படி எல்லா விஷயங்களும் எல்லோருக்கும் நன்கு தெரிந்திருக்கும் என்று தெரிந்தும் நாம் எழுதியவைகளை ம்ற்றவர்கள் படிக்க வேண்டும் என்பதற்காக எழுதுவதும் - தொடரும் சிறுகதைகள்